செல்வச் சந்நிதி திருத்தலத்தின் மகிமை
கந்த புராணப் படலத்திலே செல்வச் சந்நிதி திருத்தலத்தில் வேலன் எழுந்தருளியமைக்கான வரலாற்றுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எவ்வாறெனில் இற்றைக்கு 2000 ஆண்டுகளிற்கு முற்பட்ட காலத்திலே முருகப் பெருமான் சிவபெருமானின் வேண்டுகோளை ஏற்று சூரபத்மன் முதலிய அசுரர்களை அழிப்பதற்காக அன்னை பராசக்தி அளித்த சக்தி வேலுடனும், இலட்சத்தொன்பது படை வீரர்களுடனும் தென் திசை நோக்கிப் பயணித்து திருச்செந்தூரை வந்தடைந்தார். திருச்செந்தூரில் இருந்து கொண்டு தனது வீரம் மிகுந்த படைத் தளபதியாகிய வீரபாகு தேவரை சூரபத்மனுடைய மகேந்திரபுரி நோக்கி தூது அனுப்புகின்றார்… வீரபாகு தேவரும் முருகப் பெருமானுடைய வேண்டுகோளை ஏற்று மகேந்திரபுரி நோக்கித் தூது செல்கையில் சந்திக்காலம் வரவே முன்பு வல்லிநதி என்று அழைக்கப்பட்ட தற்போதைய தொண்டைமான் ஆற்றங்கரையில் கால் பதித்து தரித்து அவ் ஆற்றிலே ஸ்நானம் செய்து வல்வை இணை ஆற்றங்கரையோரம் இருந்த பூவரச மரத்தடியில் தான் கொண்டு வந்த வேலை நிறுத்தி முருகப் பெருமானுக்குச் சந்திக்காலப் பூஜை செய்து வழிபட்டார். இதன் காரணத்தினாலேயே இவ் ஆலயம் செல்வச் சந்நிதி என்ற காரணச் சிறப்புப் பெயருடன் மிளிர்கின்றது. பிற்பட்ட க