மீண்டும் ஏமாற்றப்பட்ட தமிழினம்!







கடந்த 13ஆம் திகதி முதல் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமர்வில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான ஒரு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியிலிருந்து தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் திட்டமிட்ட இன அழிப்பிற்கும் எதிராக குரல் கொடுத்து எதற்காக இற்றைவரை போராடிக் கொண்டிருந்தோமோ அத்தனையும் வீணாகி மீண்டும் ஒருமுறை தமிழினம் ஏமாற்றப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கமும் தமிழர் விரோத அமைப்புகளும் சேர்ந்து இவ்வாறானதொரு தமிழ் மக்களுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது வேதனைக்குரியதாகும். ஈழத் தமிழர்களாகிய நாங்கள் இற்றைவரை தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு எதுவித கால அவகாசமும் வழங்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி வந்தோம் . ஏனென்றால் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு 4 ஆண்டு கால அவகாசம் வழங்கியும் இலங்கை அரசாங்கம் எத்தகைய காத்திரமான முடிவையும் எடுத்திருக்கவில்லை.இவ்வாறாக வழங்கப்பட்ட இந்த கால அவகாசத்தின் போது தங்களுடைய காணாமல் போன உறவுகளை தேடிக்கொண்டிருந்த இடுபது உறவுகள் உயிரிழந்திருக்கிறார்கள்.இனியும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நம்மிடம் இருக்கும் எச்ச சொச்ச ஆதாரங்களும் அனைத்தும் அளிக்கப்படுவதற்கான சூழ்நிலையின் மத்தியில் தான் தமிழ் இனம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.எனவேதான் இலங்கைக்கு இனியும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்பதனை நாம் வலியுறுத்தி வந்தோம் ஆனால் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியில் தமிழர் விரோத அமைப்புகள் செயற்பட்டு தமிழ்ர்களுக்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழர் மீண்டும் ஏமாற்றப்பட்டிருப்பது வேதனைக்குரியது.


Comments