OFFICE ON MISSING PERSONS




     OMP என்றால் என்ன ?

1. காணாமல் போனோர் அலுவலகம் (OMP) சனாதிபதியால் 2016 ஆம் ஆண்டு இலக்கம் 14 சரத்தின் கீழ் நியமிக்கப்பட்டு இருந்தது .

2. இதை உருவாக்குவதற்கான சட்டம் 2016 ஆம் ஆண்டு ஆவணி மாதம்  தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது .ஏறத்தாழ 1 ஆண்டு கடந்து 2017 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இந்த அலுவலகம் நிறுவப்பட்டது

3. OMP இற்கு எந்தவொரு நீதிமன்ற அதிகாரமும் இல்லை. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு OMP யினால் கண்டு பிடிக்கப்படும் எந்தவொரு விடயமும் குற்றவியல் அல்லது சிவில் சட்ட மீறல் சம்பந்தமான குற்றத்திற்கு வழிவகுக்காது.

4. OMP ஒரு சுயாதீனமான அமைப்பு அல்ல. அதன் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் தலைவரும் ஜனாதிபதியினாலேயே நியமிக்கப்பட்டனர்

5. இந்த அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட ஏழு ஆணையாளர்களுள் ஒருவராக மேஜர் ஜெனரல் பதவி நிலைக்குரிய இராணுவ அதிகாரி ஒருவரும் இதில் உள்ளடக்க பட்டு இருந்தார் .இந்த அதிகாரி தான் இறுதி யுத்த களத்தில் ராணுவத்திற்க்கான சட்ட அதிகாரியாக தொழில்பட்டதோடு ஜெனீவா அமர்வுகளில் அரசாங்கம் சார்பாக கலந்து கொண்டு போர்க்குற்றங்களுக்கு எதிராக பேசி வந்தவர்.

6. இவ் OMP  அமர்வுகள் நடைபெற்ற அதே வேளையில் காணமால் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மரணச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது .

 7. OMP அமர்வுகளை நடத்தும் போது காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பதைப் பற்றியே கூடுதல் கரிசனை காட்டினார் அன்றி காணாமல் போகச் செய்யப்பட்டவர்களைத் தேடுவதில் அவர்கள் கவனம் இல்லை என்பதை அவர்கள் இந்த அமர்வுகளில் சாட்சியமளிக்க வருவோரிடம் கேட்கும் கேள்விகள் அமைந்து இருந்தன .

 8. OMP இற்கு  ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட சர்வதேச நிபுணர்களில் ஒருவர் இலங்கை அரசாங்கத்தினால் தனது சர்வதேச பிரச்சாரத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு சம காலத்தில் நியமிக்கப்பட்டவர் என்பது அண்மையில் அறியக் கிடைத்துள்ளது.

9. OMP நடத்திய அமர்வுகளின் முடிவில் காணாமற்போன ஆட்களைத் தேடுதல் மற்றும் தேடிக் கண்டுபிடித்தல், உரிய இழப்பீட்டு மார்க்கங்களை அறிமுகப்படுத்துதல், அலுவலகத்தின் நடவடிக்கைகளை செயற்படுத்துதல், உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்கள், அரச நிறுவனங்களுடனான கலந்தாலோசித்தலும் ஒத்துழைப்பு, காணாமற்போன ஆட்கள்பற்றிய பெயர்பட்டியலைத் தயாரித்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கி இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்க பட்டு இருந்தது .அதற்க்கு பிறகு அந்த அலுவலகம் உறங்கு நிலையில் இருக்கிறது

10. இந்த அலுவலகம் முன்னைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் கடத்தல்களுடன் தொடர்புபட்டதாக பொதுமக்களால் சாட்சிகளுடன் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் ராணுவ அதிகாரிகள் , டக்ளஸ் தேவானந்தா , இனியபாரதி என பல தமிழ் ஒட்டுக்குழுக்கள் , இறுதி யுத்தத்தை நடத்திய ராணுவ அதிகாரிகள் என யாரையும் விசாரணை செய்கிற அதிகாரத்தை கொண்டு இருக்க வில்லை

11. இப்போது அரசாங்கம்  இந்த அலுவலகத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடுகளை  கூட செய்வதில்லை


Comments