இப்படை தோக்கின் எப்படை வெல்லும்?


Image result for மாவீரர்
இதய உறவுகளே
உங்கள்
இன்னல் நினைவுகள் 
இரத்த நாளங்களை
இறுகப்பிழிகின்றன!
இழைக்கப்பட்ட துரோகங்கள்
இமைப்பொழுதும் நாம்
மறந்துவிடப்போவதில்லை! !!!
சபதமெடுத்து
சாதிக்கச்சென்ற
சாணக்கியர்களின்
சத்திய வாக்குகள்
சரித்திரம் படைத்திடும்!
சற்றே பொறுத்திரு!!!
செத்துமடிந்து
மண்ணோடு மண்ணாய்
மக்கிப்போனாரோ?
துமியளவும் இல்லை!!!
வெடித்துப்பிளந்து
வீரத்தின் வாரிசு
விருட்சமாய் வளர்ந்து
விண்வரை உயர்ந்து
தடைகளை
சுக்குநூறாய்
தகர்த்தெறிவீர்!!!
எதிரியவன்
எதிர் நிற்பதைக் கூட
எண்ணி நடுங்குவான்!!!
என்னே இவர்கள்
துணிச்சலென
துடிதுடித்துப்போவான்!!!
திக்குத்திசை தெரியாது
திணறிப்போவான்!!!
எம்மவர்
எழுச்சிகண்டு,
எண்திசை எங்கும்
எதிரொலிக்கும்
வெற்றி முரசொலி கேட்டு
வீரம் விளைந்த மண் இதுவென
விறுவிறுத்துப்போவான்!!!
காவியமாய்ப்போன
கல்லறை நாயகர்களே!!!
காலம்நூறு கடந்து போகினும்
உமை எண்ணி எந்நாளும்
விழிகளில் கண்ணீர்
கசிந்துகொண்டேயிருக்கும்!!!
வீரத்தின் வழி எம்மை
நெருங்கினால்
நொருங்கிப்போவீர் என்று
நன்குணர்ந்த நீங்கள்
துரோகத்தின் வழி
துணிந்திட்ட நீவீர்
தாய்நாட்டை
தற்காலிகமாய்
தகர்த்தெடுத்துக்கொண்டீர்!!!
இத்தோடு இது
முடிந்துவிட்டதாய் எண்ணி
இன்புறாதே
எம் இனத்தை
சிதைத்தவனே!!!
விடமாட்டோம்!!!
மன்னித்து விடமாட்டோம்
மறந்து விடமாட்டோம்
நினைவிற்கொள்!!!!
நாளைய பொழுதினில்
உனை மாய்த்த மண்ணில்
எம்மவர் வீரம்
துளிர்விட்டிருக்கும்!!!!

Comments